×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மேற்சவ விழா: 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் பிரம்மேற்சவ விழா, 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில், நரசிம்ம சுவாமி பிரம்மேற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூலை 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 3ம் நாள் (ஜூன் 29) மற்றும் 7ம் நாள் (ஜூலை 3) அதிகாலை 5.30 மணிக்கு உற்சவத்தில் கருட சேவை நடைபெறும். 7வது நாளில் (ஜூலை 7) காலை 5.30 முதல் 6.30 மணிக்குள் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். 27ம் தேதி தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை காலை மற்றும் மாலையில் சாமிக்கு விலையுர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு, கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை போன்ற வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, கோயிலை சுற்றியுள்ள தென் மாடவீதி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு, சிங்காரச்சாரி தெரு, தேரடித் தெரு மற்றும் திருக்குளத்தினை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெறும். திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மேற்சவ விழா: 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Brahmetsava ceremony ,Tiruvallikeni Parthasarathy Temple ,CHENNAI ,Tiruvallikeni Partha ,Charathi ,Temple ,Parthasarathy ,Tiruvallikkeni, Chennai… ,Brahmatsava ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...